வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 4 நவம்பர் 2019 (12:42 IST)

இன்னும் சில நாட்களில் அயோத்தி தீர்ப்பு..

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? என்பதில் வருகிற 15 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகளாகவே அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு என்பதில் பிரச்சனை எழுந்துவருகிறது. இது குறித்தான விசாரணையில் தீவிரமாக உச்சநீதிமன்றம் இறங்கியுள்ளது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், டி.ஒய்.சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன் ஆகிய நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17 ஆம் தேதி ஓய்வு பெறும் நிலையில், வருகிற 15 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பை ஒட்டி ஏற்கனவே அயோத்தி மற்றும் உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னதாக பிரதமர் மோடி, அயோத்தி தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் அமைதி காக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில், ஹிந்து அமைப்புகளும், முஸ்லீம் அமைப்புகளும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடப்போம் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.