செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கடலூர் , சனி, 16 மார்ச் 2024 (12:41 IST)

மக்களவைத் தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மக்களவைத் தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது.
 
இப்பேரணியை கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.
 
பேரணியில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர்  பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 
 
நகர அரங்கில் தொடங்கிய இப் பேரணி கடலூரின் முக்கிய சாலை வழியாக கடலூர் உழவர் சந்தை அருகே முடிவடைந்தது. 
 
இந்த விழிப்புணர்வு பேரணியில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.