வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கடலூர் , சனி, 16 மார்ச் 2024 (12:21 IST)

தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட சின்னத்திரை கலைஞர்கள்

தனியார் பாலிடெக்னிக்  கல்லூரியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட சின்னத்திரை கலைஞர்கள்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2023 -2024 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி மற்றும் ஆண்டு விழாவானது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவரது மகனும் கல்லூரியின் நிர்வாக இயக்குனருமான சி.வெ. க.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
 
இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக குக்கு வித் கோமாளி, சமூக சேவகர் பாலா மற்றும் கலக்கப்போவது யாரு காமெடி நடிகர்  விக்கி சிவா ஆகியோர்கள்  பங்கேற்று  மாணவ மாணவிகள் முன்பு மிமிக்ரி ,ஆடல் பாடல் என அனைத்து மாணவர் மகிழ்வித்தனர்.
 
இந் நிகழ்வில் இக் கல்லுரியின் பேரசிரியர்கள்,மற்றும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் உட்பட அனேகம் பேர் கலந்து கொண்டனர்