1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. avin milk producers strike from march 17

ஆவின்பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்.. பால் விநியோகம் பாதிக்குமா?

ஆவின்
ஆவின் பால் உற்பத்தியாளர்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதை அடுத்து ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஆவின் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து லிட்டருக்கு ரூபாய் 32 கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் ஒரு லிட்டருக்கு ஏழு ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மார்ச் 17ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்
 
இதனால் அடுத்த வாரம் முதல் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குஷ்பு திடீர் போராட்டம்.. என்ன காரணம்?