திடீரென ஆங்கில செய்தி வாசிப்பாளராக மாறிய ரேஷ்மா - மிரண்டுபோன நக்கீரன் கோபால் - வீடியோ!
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது.
அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது. அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்களிடையே பிரபலமானார்.
தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நக்கீரன் கோபால் ரேஷ்மாவின் திறமையை பார்த்து பிரம்மித்து போனார்.
ஆம், அங்கிருந்தவர்களுக்கு செய்தி வாசிப்பாளராக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஆங்கில செய்து வாசிப்பாளராக மாறி ரேஷ்மா படபடவென பேசி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.