செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (13:27 IST)

ஆவடி சித்த மருத்துவர் கொலை.. மனைவியிடம் தவறாக நடந்ததால் கொலையா?

ஆவடி சித்த மருத்துவர் சிவன் நாயர், மனைவி கொலை வழக்கில் கைதான வடமாநில நபர் மகேஷ் தன் மனைவியிடம் தவறாக நடந்ததால் இனி வீட்டிற்கு வர வேண்டாம் என மருத்துவர் எச்சரித்தது விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது. மேலும் மகேஷ், சித்த மருத்துவரிடம் மன அழுத்த சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
ஆவடி சித்த மருத்துவர் சிவன் நாயர் மனைவியிடம் மகேஷ் தவறாக நடந்ததாகவும், இதற்கு சித்த மருத்துவர் எச்சரித்த போதிலும் மீண்டும் வந்து மனைவியிடம் அத்துமீற முயன்ற தகராறில் இருவரையும் மகேஷ் கொலை செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் மகேஷின் போனை கைப்பற்றி போலீசார் விசாரித்ததில் ஆபாச உரையாடல்கள் இருந்ததும் ஏராளமான பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக சித்த மருத்துவரிடம் மருத்துவம் பார்க்க வந்த அனைவரிடமும் விசாரணை நடந்து வருவதாகவும் பணம் மற்றும் நகைக்காக இந்த கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது விசாரணையில் மகேஷிடம் போலீசார் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Mahendran