ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்கள்: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது முதல் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொருட்களை விநியோகம் செய்ய டோக்கன் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதும், அந்த டோக்கன்களை பெற்றுக்கொண்ட பயனாளிகள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதமும் ரேஷன் பொருட்களை வாங்குவது குறித்து தமிழக அரசு தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு 1,3,4 ஆம் தேதி வீடு தேடி சென்று ஊழியர்கள் டோக்கன் தரவேண்டும் என்றும், நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ரேசன் ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், டோக்கனில் குறிப்பிடாத நேரத்தில் பொருள்கள் வழங்கப்பட்டாது என தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது