செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (09:38 IST)

வேலி முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்களின் உள்ளாடைகள்… சுற்றுலாத் தளத்தின் வினோத பழக்கம்!

நியுசிலாந்தில் உள்ள ஒரு சுற்றுலா தளப் பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்களின் பிராக்கள் தொங்கவிடப்பட்டுள்ளன.

நியூசிலாந்தின் சென்ட்ரல் ஒடாகோவில் கார்டோனா உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு பகுதியில் அமைந்துள்ள நீண்ட வேலி முழுவதும் பெண்களின் பிராக்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன. அங்கு சுற்றுலாவுக்கு செல்லும் பெண்கள் அந்த இடத்தில் தங்கள் பிராக்களை மாட்டி வருவதோடு அங்கு நின்று புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காகவும், பெண்கள் தங்கள் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக இப்படி வேலியில் பிராக்களை தொங்கவிடுவதாக சொல்லப்படுகிறது. இங்கு பிராக்களை வைத்து செல்லும் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது. 2000 ஆம் ஆண்டில் முதல் முதலாக இந்த வேலியில் பிராக்களை தொங்கவிடும் பழக்கம் தோன்றியதாக சொல்லப்படுகிறது.