வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (16:21 IST)

1000 ரூபாய் கேட்டால் 10000 ரூபாய் கொடுத்த ஏடிஎம் – ஆம்பூரில் நடந்த வினோதம் !

கோப்புப் படம்

ஆம்பூர் அருகே உள்ள ஏடிஎம் ஒன்றில் 1000 ரூபாய் பணத்துக்காக இளைஞர் ஒருவர் வேண்டுகோள் விடுத்த போது 10000 ரூபாய் வந்துள்ளது.

கிருஷ்ணகிரியை சேர்ந்த சின்னா,என்ற இளைஞர் ஆம்பூருக்கு அருகே உள்ள ஏடிஎம் ஒன்றில் சென்று பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது தங்களது ஏடிஎம் அட்டையை சொருகி பின் நம்பர் உள்ளிட்ட விவரங்களைத் போட்டு 1000 ரூபாய் பணத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் ஏடிஎம்மோ கத்தையாக பணத்தை வெளியே தள்ளியுள்ளது. எண்ணிப் பார்த்ததில் அதில் மொத்தமாக 10000 ரூபாய் பணம் இருந்துள்ளது. இதைப் பார்த்து ஆச்சர்யமான இளைஞர் எடுத்துக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் விவரத்தை சொல்லியுள்ளார். அவரிடம் இருந்து புகார் பெற்றுக் கொண்ட போலிஸார் அவரைப் பாரட்டி அனுப்பியுள்ளனர். மேலும் ஏடிஎம் எந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு பற்றி விசாரிக்க வங்கி அதிகாரிகளை நாடியுள்ளனர்.