ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 27 மே 2024 (20:48 IST)

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
பெண் போலீசாரை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீதும், அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் ஃபெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் திருச்சி சிறைக்கு அழைத்து சொல்லப்பட்ட நிலையில், ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார். அதேபோல, சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மீதான விசாரணையும் வரும் மே 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.