செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 ஜூன் 2021 (16:18 IST)

பிரபல நடிகரின் தந்தை கொரொனாவால் மரணம்

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் பால சரவணனின் தந்தை கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார் இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

கடந்தாண்டு இந்தியாவில் கொரொனா நுழைந்தது முதலே எதிர்பாராத பல பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் மரணம் அடைவது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், நடிகர் விவேக், ஜனநாதன், பாண்டு, உள்ளிட்டோர் தொடர்ந்து மரணம் அடைந்தனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் பால சரவணின் தந்தை கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார் இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாக கொரொனா இரண்டாம் அலையின் தொற்றுக் குறைந்து வருகிறது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
சில நாட்களுக்கு முன் நடிகர் பால சரவணனின் தந்தை எஸ்.ஏ.ரங்கநாதன் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

எனவே இன்று பாலசரணனின் தந்தை கொரொனா சிகிச்சை பலனின்றி காலையில் மரணம் அடைந்தார். இதுகுறித்து பால சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில், தந்தையை இழப்பது தாங்க முடியாத இழப்பு எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்தான் இவரது தங்கையின் கணவர்(32) கொரோனா தொற்றால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

திரையுலகினர் மற்றும் அவரது நண்பர்கள் நடிகர் பாலசரவணனுக்கு  ஆறுதல் கூறி வருகின்றனர்.