1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 டிசம்பர் 2021 (11:27 IST)

ஜனவரி 6ம் தேதி சென்னை புத்தக கண்காட்சி! – முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

சென்னையில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் புத்தக கண்காட்சி ஜனவரியில் நடைபெற உள்ளதாக பபாசி அறிவித்துள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரும் புத்தக விழாவாக சென்னை புத்தக கண்காட்சி இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெறும் இந்த கண்காட்சி இந்த ஆண்டில் கொரோனா காரணமாக பிப்ரவரியில் நடந்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான புத்தக கண்காட்சி ஜனவரி 6 முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என பபாசி அறிவித்துள்ளது. புத்தக கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். வழக்கம்போல மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என்றும், மற்றவர்களுக்கு நுழைவு கட்டணம் ரூ.10 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.