1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Arvindh Kejriwal letter to dmk mk stalin

திமுகவிற்கு 2 கோடி டெல்லி மக்களின் சார்பாக நன்றி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

kejriwal
டெல்லி நிர்வாக மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்த திமுகவிற்கு இரண்டு கோடி டெல்லி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 
 
டெல்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மசோதாவுக்கு எதிர்த்து வாக்களித்த கட்சிகளில் ஒன்று திமுக. 
 
இந்த நிலையில்  டெல்லி அவசர சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்த்து வாக்களித்த திமுகவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் 
 
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அவர் கடிதம் எழுதி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. திமுக உள்பட கிட்டத்தட்ட அனைத்து எதிர்கட்சிகளும் இந்த மசோதாவுக்கு எதிர்த்து வாக்களித்துள்ளனர் என்பதும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
பேருதான் வேற.. ஸ்டைல், கேமரா எல்லாம் ஒரே மாதிரி..! – POCO M6 Pro Vs Redmi 12 5G!