1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 10 டிசம்பர் 2022 (17:06 IST)

கமல் கட்சியில் இருந்து மீண்டும் கமல் கட்சிக்கே வந்த பிரபலம் இவர்தான்!

arunachalam
கமல் கட்சியில் இருந்து மீண்டும் கமல் கட்சிக்கே வந்த பிரபலம் இவர்தான்!
கமல் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்த பிரபல ஒருவர் மீண்டும் கமல் கட்சியை வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கமல் கட்சியில் இணைந்து பணிபுரிந்த அருணாசலம் என்பவர் 2020 ஆம் ஆண்டு விலகி பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது மீண்டும் கமல் கட்சிக்கு வந்துள்ளார். இதுகுறித்து கமல் கட்சியின் மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
 
மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ முன்னாள்‌ நிறுவனப்‌ பொதுச்‌ செயலாளர்‌ திரு. அருணாச்சலம்‌ அவர்கள்‌ நமது தலைவர்‌, நம்மவர்‌ திரு. கமல்ஹாசன் அவர்களை நேரில்‌ சந்தித்து இன்று நமது கட்சியில்‌ மீண்டும்‌ இணைந்தார்‌.
 
அரசியலில்‌ ஆழங்காற்பட்ட அனுபவம்‌ மிக்க திரு. அருணாச்சலம்‌ தமிழக அரசியலில்‌ ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த நம்மவர்‌ அவர்களால்தான்‌ முடியும்‌ என்பதை உணர்ந்து களப்பணியாற்றியவர்‌. அவர்‌ மீண்டும்‌ நம்மோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரை மனதார வாழ்த்தி வரவேற்கிறேன்‌.
 
வருகிற நாடாளுமன்றத்‌ தேர்தலில்‌ மக்கள்‌ நீதி மய்யத்தினை பெருவெற்றியடையச்‌ செய்யவேண்டுமெனும்‌ உயரிய நோக்கத்துடன்‌ உழைக்க வந்திருக்கும்‌ திரு. அருணாச்சலம்‌ அவர்களோடு மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ நிர்வாகிகளும்‌, அனைத்து உறுப்பினர்களும்‌ ஒத்துழைத்து நமது கட்சியின்‌ வளர்ச்சிக்கும்‌ வெற்றிக்கும்‌ உதவவேண்டுமென அன்புடன்‌
கேட்டுக்கொள்கிறேன்‌.
 
Edited by Mahendran