ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 28 மார்ச் 2022 (14:07 IST)

மேலும் ஒரு மின்சார பைக் தீப்பிடித்தது: பொதுமக்கள் அச்சம்!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வேலூரில் மின்சார பைக் சார்ஜ் போட்டு இருந்த போது ஏற்பட்ட விபத்து காரணமாக தந்தை-மகள் பலியாகினர்
 
 இந்த நிலையில் இந்த சோகம் முடிவதற்குள் திருவள்ளுவரில் மேலும் ஒரு மின்சார ஸ்கூட்டர் தீ விபத்தில் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரம் என்ற பகுதியில் இன்று காலை தேன்மொழி என்பவரின் மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அருகில் இருந்த பைக்குகளுக்கும் பரவியதில் மற்ற 2 பைக்குகளும் தீக்கிரையாகின
 
இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அடுத்தடுத்து மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.