செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 2 ஜூன் 2023 (07:40 IST)

DMK files இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ்? அண்ணாமலை தகவல்..!

DMK files இரண்டாம் பாகம் வரும் ஜூலை மாதம் முதல் வாரம் வெளியிடப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
DMK files முதல் பாகம் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் முதலமைச்சர் முக ஸ்டாலின் குடும்பத்தினர் உள்பட பல்வேறு பிரபலங்களின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார் 
 
இதனை அடுத்து அண்ணாமலை மீது முதலமைச்சரின் குடும்பத்தினர் உள்பட திமுகவினர் வழக்கு தொடர நோட்டீஸ் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சொத்து பட்டியல் வெளியான ஒரு சில நாட்களில் தான் ஜி ஸ்கொயர் மற்றும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் DMK files  இரண்டாம் பாகம் ஜூலை முதல் வாரம் வெளியாகும் என்றும் அந்த பட்டியல் வெளியானவுடன் ஜூலை 9ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணம் தொடங்க இருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
Edited by Siva