வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (16:50 IST)

நேற்று கைதானவர் இன்று உயிரிழப்பு: அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

நேற்று கைதாகி விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அற்புதராஜ் மரணம் இன்று உயிரிழந்ததால் போலீசார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாமல் இருந்ததை அடுத்து பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு அற்புதராஜை நேற்று போலீசார் கைது செய்தனர். கைதுக்கு பின் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு விழுப்புரம் கிளை சிறையில் அற்புதராஜ் அடைக்கப்பட்டார்.

சிறையில் சக கைதிகளுடன் நன்றாக பேசிக் கொண்டிருந்த அற்புதராஜ், இன்று காலை 6 மணிக்கு எழுப்பியும் எழுந்திருக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வழியிலேயே அற்புதராஜ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அற்புதராஜ் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் போலீசார் தான் அவரை அடித்து கொலை செய்திருப்பார்கள் என்று கூறியுள்ள அவரது உறவினர்கள் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்றும் கூறி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva