வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 11 ஜூலை 2020 (17:55 IST)

கொரோனா பரவல் எதிரொலி -அரியலூர் மாவட்டத்தில் ஒரு வாரம் கடையடைப்பு!

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் தற்போது அதிகமாகி வரும் நிலையில் நாளை முதல் ஒரு வாரம் கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவிய மாவட்டங்களில் அரியலூரும் ஒன்று. கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியதால் இங்கு முதலில் கொரோனா பரவ ஆரம்பித்தது. அதன் பின்னர் ஓரளவு கட்டுக்குள் இருந்த பாதிப்பு இப்போது அதிகமாக ஆரம்பித்துள்ளது.

இதனால் இப்போது ஒருவாரம் கடைகளை அடைக்க அரியலூர் மாவட்ட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். நாளை முதல் ஒரு வாரத்துக்கு இந்த கடையடைப்பு செயல்பட இருக்கிறது.  இதில் பால்கடைகள் மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை அரியலூரில் மொத்தமாக 497 பேருக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் 459 பேர் குணமாகி வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில் 38 பேர் சிகிச்சையில் உள்ளனர்.