ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 11 ஜூலை 2020 (11:42 IST)

கொரோனா கட்டுப்பாட்டில் முன்னோடியாக விளங்கும் தாராவி – பாரட்டிய உலக சுகாதார நிறுவனம்!

உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றான தாராவியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா பரவும் விகிதம் ஏறுமுகத்தில் சென்றுள்ளது. அதிலும் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகர்ப் பகுதிகளில் மக்கள் நெருக்கம் காரணமாக அதிகளவில் பாதிப்பு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக கட்டுக்குள் வந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ‘சிறப்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலமாக கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என இத்தாலி, ஸ்பெயின் மற்றும் தாராவி ஆகியவை நமக்குக் காட்டியுள்ளன’ எனத் தெரிவித்துள்ளார். தாராவியில் நேற்று 12 பேர்களுக்கு கொரோனா உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.