1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 17 நவம்பர் 2017 (13:22 IST)

வீடியோ எடுத்து மிரட்டி உல்லாசம் அனுபவித்த அறிவழகன் - விசாரணையில் திடுக் தகவல்

போலீசாரிடம் பிடிபட்ட அறிவழகன் திருமண ஆசை காட்டி பல பெண்களை சீரழித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


 

 
சென்னையில், கிண்டி, அம்பத்தூர், ஆவடி, வளசரவாக்கம், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பல பகுதிகளில் கொள்ளை அடித்ததுடன், வீட்டில் இருக்கும் பெண்களை கத்தி முனையில் பயமுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்த அறிவழகனை நேற்று சென்னையில் போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
 
எம்.சி.ஏ பட்டதாரியான நான் வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்தேன். அப்போது பேஸ்புக் மூலமாக பழக்கமான கிருஷ்ணகிரியை சேர்ந்த இரு கல்லூரி மாணவிகளுக்கு, காதல் வலை வீசி உல்லாசம் அனுபவித்தேன். அவர்களின் செயினை அடகு வைத்து செலவு செய்தேன். அதன் பின் சென்னை வந்த நான் பல இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினேன்.  அப்போது பக்கத்து வீடுகளில் வசிக்கும் திருமணமாகாத இளம்பெண்களை குறிவைப்பேன். அவர்களுக்கு திருமண ஆசை காட்டி தனியார் விடுதிக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவிப்பேன். அதை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து பணம், நகை பறிப்பேன். அவர்களின் தோழிகளுக்கும் வலைவீசி கற்பை சூறையாடியுள்ளேன். 
 
மேலும், தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு, வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்பேன். அவர்கள் உள்ளே செல்லும் போது, வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி கற்பழிப்பேன். நகைகளையும் கொள்ளையடிப்பேன். சில வீடுகளின் வெளியே குடிநீர் குழாய் இருக்கும். அதை திறந்து விட்டு விடுவேன். சத்தம் கேட்டு பெண்கள் வெளியே வந்து அதை மூட வருவார்கள். அப்போது அவர்களுக்கு தெரியாமல் வீட்டிற்குள் சென்றுவிடுவேன். அவர்கள் உள்ளே வந்து தாழ்பாளை போட்டதும், கத்தியை காட்டி மிரட்டி உல்லாசம் அனுபவிப்பேன். 
 
அதுபோக, பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்-அப் மூலமாகவும் பெண்களை வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்துவிட்டு கழற்றிவிட்டுவிடுவேன்” என அவர் கூறியுள்ளார்.
 
சென்னையில் மட்டும் 30க்கும் மேற்பட்ட பெண்களை அறிவழகன் சூறையாடியது கேட்டு போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.