பிளஸ் 2 பொதுத்தேர்வு: மறுமதிப்பீடு, மறு தேர்வுக்கு விண்ணப்பம் எப்போது?
பிளஸ் டூ பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் மறு மதிப்பீடு மற்றும் மறு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தேர்வு எழுதிய மாணவ மாணவர்களில் 94.56 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் தேர்ச்சி பெறாதவர்கள் உடனடியாக மறு தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள் நாளை விண்ணப்பிக்கலாம் என்றும் மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு கல்லூரிகளில் சேர்க்க வசதி வாய்ப்புகள் உள்ளதால் யாரும் மனம் தளர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் மறு தேர்வு நடத்தப்பட்டு ஜூலை இறுதிக்குள் மறு தேர்வு முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
எனவே பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைவாக இருந்தாலும் அல்லது தோல்வி அடைந்திருந்தாலும் உடனடியாக மாணவர்கள் மறு தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Edited by Mahendran