1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 மார்ச் 2018 (09:05 IST)

அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மாரடைப்பு - ஐசியு வில் அனுமதி

அப்பல்லோ மருத்துவக் குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பல்லோ குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டிக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மயக்கி விழுந்த அவருக்கு இதய அடைப்புக்கான ஆஞ்சியோ செய்யப்பட்டது. மருத்துவப் பரிசோதனை முடிந்ததை அடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அப்பல்லோவில் முக்கிய பிரமுகர்களுக்கான வார்டில் பிரதாப் ரெட்டிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.