திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (13:42 IST)

18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரே முதல்வர் - தினகரன் அதிரடி

எனக்கு ஆதரவு அளித்த 18 எம்.எல்.ஏக்களில் ஒருவரை தமிழக முதல்வராக்குவேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 
துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் இணைந்த பின், அவர்கள் டிடிவி தினகரனை ஓரங்கட்டினர். இதனால், 18 எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு, தனக்கென ஒரு தனி அணியை உருவாக்கினார் தினகரன். இதனால், அந்த எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும், அவர்கள் இப்போதும் தினகரன் அணியிலேயே நீடித்து வருகின்றனர்.
 
அந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தினகரன், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், எடப்பாடி பழனிச்சாமியை வீட்டிற்கு அனுப்பி விட்டு விரைவில் ஆட்சியை கவிழ்ப்போம் என தொடர்ந்து கூறி வருகிறார். குறிப்பாக, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியான பின், எடப்பாடி தலைமையிலான ஆட்சி கவிழும் என அவர் உறுதியாக கூறி வருகிறார்.
 
எப்படியாவது அதிமுகவை கைப்பற்றும் முடிவில் இருக்கும் அவர், தற்போது எம்.எல்.ஏ.வாகவும் ஆகிவிட்டதால், கண்டிப்பாக முதல்வர் பதவிக்கு குறி வைப்பார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் “முதல்வராகும் ஆசை எனக்கு இல்லை. என்னை நம்பி என் பின்னால் வந்து பதவி இழந்து தியாகம் செய்த 18 எம்.எல்.ஏக்களில் ஒருவரையே முதல்வராக  நியமிப்பேன்” என அவர் கூறியுள்ளார்.