1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 22 ஏப்ரல் 2023 (15:27 IST)

தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்ப பெற வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

திமுக அரசு மக்கள் நலனிற்கு எதிராகச் செயல்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா தமிழகம்  சட்டப்பேரவையில்  நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்சிகளும், திமுகவில் இடம்பெற்றுள்ள விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட  கூட்டணி கட்சிகளும்  எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முக்கிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,’’ திமுக அரசு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதை  வேடிக்கை பார்க்க முடியாது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தொழிலாளர் சட்டத்தை உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.  மேலும், தமிழக அரசு தொழிலாளர்களின் நலன் காப்பதற்காக அதிமுக கட்சி எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளும்’’ என்று தெரிவித்துள்ளார்.