1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified புதன், 3 ஆகஸ்ட் 2022 (14:26 IST)

தமிழகத்தில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை

தமிழகத்தில் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார்.இது தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இன்று பள்ளிப்பட்டு தாலுக்கா ராமா நாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கங்கோத்ரி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

பள்ளிப்பட்டு தாலுக்காவின் ராமா நாயுடு கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் தாமு. இவரது மனைவி ராகராஜேஸ்வரி. இவர் கொரோனாவால் கடந்தாண்டு உயிரிழந்தார்.

இவர்களுக்கு கங்கோத்ரி உள்ளிட்ட 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் கங்கோத்ரி, அங்குள்ள கீச்சலம் அரசினர் மேல் நிலைப்பள்ளீயில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.இவர் தாய் இறந்தபின் அதிகளவில் மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி குடும்பத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது போலீஸார் மாணவியின் ட்ஹற்க்லை பற்றி விசாரித்து வருகின்றனர்.