1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Court dismissed PubG madan petition

பப்ஜி மதனை ஏன் வெளியில் விட வேண்டும்? – நீதிமன்றம் கேள்வி!

Tamilnadu
ஆபாச பேச்சு சர்ச்சை விவகாரத்தில் கைதான பப்ஜி மதனை விடுவிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

யூட்யூப் சேனலில் பெண்களை ஆபாசமாக பேசுதல், பண மோசடி உள்ளிட்ட குற்ற செயல்களுக்காக பிரபல யூட்யூபரான பப்ஜி மதன் கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் உள்பட பல சட்டங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் பப்ஜி மதம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அளிக்கப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மனுவை விசாரித்த நீதிமன்றம் “பப்ஜி மதனின் பேச்சு நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது. அவரை எதற்காக வெளியே விட வேண்டும்?” என கேள்வி எழுப்பியதுடன், முன்கூட்டியே விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
இன்று தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை!