புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2019 (10:42 IST)

சென்னையில் ஐடி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – விடிய விடிய போலிஸ் சோதனை !

சென்னை கந்தஞ்சாவடியில் உள்ள ஐடி நிறுவனத்திற்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பதற்றமான சூழல் உருவானது.

சென்னை கந்தன்சாவடியில் 13 அடுக்கு மாடிகளைக்கொண்ட ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அந்நிறுவனத்தின் காவலர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய அவர் ‘ அந்த கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன், அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கப்போகிறது.’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து காவலர்கள் மூலமாக இந்த விஷயம் உயரதிகாரிகளுக்கு தெரியவர காவலர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. அவர்கள் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் வந்த போலிஸார் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே சமயம் தொலைபேசியில் அழைத்த அந்த மர்மநபர் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.