திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2019 (09:35 IST)

பைக் ஓட்ட கற்று கொண்டபோது விபத்து: சென்னை இளம்பெண் பலி

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பருடன் பைக் ஓட்ட கற்றுக்கொண்டபோது ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக பலியானார். அவருக்கு பைக் ஓட்ட கற்றுக்கொடுத்த இளைஞர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
 
சென்னை குன்றத்தூர் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் அபிநயா என்ற இளம்பெண் தன்னுடன் பணிபுரியும் அண்ணாமலை என்பவருடன் பைக் ஓட்ட கற்று கொண்டிருந்தார். அபிநயா பைக் ஓட்ட, அவருக்கு பின்னாள் அமர்ந்திருந்த அண்ணாமலை அவருக்கு பைக் ஓட்ட கற்று கொடுத்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அபிநயா ஓட்டிய பைக் திடீரென எதிர்பாராதவிதமாக தடுப்புச்சுவரில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் அபிநயாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானதும் தெரியவந்தது. மேலும் படுகாயம் அடைந்த அண்ணாமலை சாலையிலேயே மயக்கமடைந்தார்
 
 
இந்த நிலையில் இருசக்கர வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி, இளம் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாகவும், இளைஞர் ஒருவர் மயங்கி  கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி, இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.