புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (13:31 IST)

தமிழகத்தில் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அண்ணாமலை கடிதம்

annamalai
தமிழகத்தில் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\
 
கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள பாஜக அலுவலகம், நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் கடிதம் எழுதியுள்ளார் 
 
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை தாக்குதல்கள் அச்சுறுத்தல்கள் ஏற்படும் வகையில் இருப்பதாகவும் இதுவரை 19 தாக்குதல் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்திருப்பதாகவும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
 
வகுப்புவாத சக்திகளுக்கு துணைபோகும் தமிழக அரசின் தவறான நிலைப்பாடுகளை ஆதார விளக்கங்களுடன் அவர் அமித்ஷாவுக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.