செவ்வாய், 3 அக்டோபர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (14:22 IST)

10 ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கை.. சிவி சண்முகத்திற்கு அண்ணாமலை எச்சரிக்கை..!

பத்தாண்டுகள் துப்பாக்கி பிடித்த கை என்னுடையது என்றும் என்னுடைய நேர்மையை கொச்சைப்படுத்தி பேசினால் விட மாட்டேன் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள்  அமைச்சர் சிவி சண்முகம் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
சமீபத்தில் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அவர்களும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை ’சி.வி. சண்முகம் மாலை 6 மணிக்கு முன்பு ஒரு விதமாகவும் அதன் பின்பு வேறு விதமாகவும் பேசுவார். 
 
பத்து ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கை என்னுடையது, என்னுடைய நேர்மையை கொச்சைப்படுத்தினால் விடமாட்டேன். நல்ல போலீசை பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போலத்தான் இருக்கும் என்று அவர் பதில் கொடுத்துள்ளார்
 
Edited by Siva