ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (11:17 IST)

நெய் விலை உயர்வு குறித்து பேச அண்ணாமலைக்கு உரிமை இல்லை: அமைச்சர் மனோ தங்கராஜ்..!

MANO THANGARAJ
ஆவின் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வு குறித்து அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இதற்கு அண்ணாமலை உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 
 
இந்த நிலையில் நெய் விலை உயர்வு குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்  
மேலும் தனியார் நிறுவனங்களின் நெய் விலையை விட ஆவின் நெய் விலை குறைவாக இருப்பதாகவும் வெளிச்சந்தையில் தனியார் லிட்டருக்கு 960 முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
மேலும் ஆவின் விற்பனையை அதிகரிக்க, ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் பொதுமக்களுக்கு எளிய வகையில் சென்றடைய பல்வேறு அரசு அலுவகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு பூங்காக்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் ஆவின் பாலகம் அமைத்து விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
 
Edited by Siva