திங்கள், 4 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (10:13 IST)

டெல்லி செல்கிறார் அண்ணாமலை.. கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனையா?

Annamalai
தமிழக பாஜக தலைவர் டெல்லி செல்ல இருப்பதாகவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  
 
வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றன 
 
பாஜக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, பாமக உள்ளிட்ட சில கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  வரும் 16ஆம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. 
 
டெல்லியில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது. 
 
அண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் முக்கிய கட்சி நிர்வாகிகளும் டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா, நட்டா ஆகியோர்களை சந்திக்கும் அண்ணாமலை தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran