வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 25 அக்டோபர் 2023 (14:14 IST)

ஆரியர், திராவிடர் என்பது குப்பைத் தொட்டி: அண்ணாமலை

ஆரியம் திராவிடர் என்பது குப்பைத்தொட்டி என்றும்  இந்தியாவில் ஆரியர்கள் என்று யாரும் இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.  
 
ஆளுநரை ஆர்எஸ்எஸ் பிரதிநிதி என்று டிஆர் பாலு கொச்சைப்படுத்த முயற்சி செய்கிறார் என்றும் டிஆர் பாலு எம்பி சீட் கிடைக்க வேண்டும் என்ற நப்பாசையில் பேசி வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார் 
 
பாரதியார் பற்றி பேச திமுக தலைவர்களுக்கு அருகதை இல்லை என்றும் பாரதியாரை திமுகவினர் பலகாலம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பாரதியாரை சாதி வட்டத்திற்குள் தான் அடைக்க முயற்சி செய்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.  
 
இந்தியாவில் ஆரியர் என்று யாரும் இல்லை என்றும் ஆரியர்கள் யார் என்பதை திமுகவினர் தான் விளக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் ஆரியர்களா? ஆரியர்கள் எதிரி என்றால் இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியே வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva