வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2023 (15:03 IST)

நிர்மலா சீதாராமனை சந்தித்த அண்ணாமலை, எல் முருகன்.. நிவாரண நிதி கொடுத்ததற்கு நன்றி..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர்  எல் முருகன் மற்றும் தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகிய மூவரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து தமிழகத்திற்கு தேவையான நிவாரண நிதி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர். 
 
இது குறித்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: 
 
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாரமன் அம்மா அவர்களுக்கு நன்றிகள்..!
 
தமிழக தென் மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு இருக்கும் கனமழை பெருவெள்ளம் குறித்து ஏற்கனவே கடந்த 20-ஆம் தேதி முதல் மத்திய குழு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் தென் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டு வருகிறது.
 
இந்த நிலையில் தங்களின் கடுமையான பணிச்சுமைக்கு மத்தியில் தென் மாவட்டங்கள் பாதிப்பு குறித்து, தமிழக பாஜக இணை பொறுப்பாளர் திரு. சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக மாநில தலைவர் திரு. அண்ணாமலை  ஆகியோருடன் இணைந்து தென் மாவட்ட பாதிப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டதற்கும் அது குறித்த துரித நடவடிக்கை எடுத்தற்கும் நன்றிகள்.
 
Edited by Siva