வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (18:01 IST)

முதலமைச்சர் யார் என்பதை தேர்தலுக்கு பின் முடிவு செய்வோம்: அமித்ஷா

Amitshah
முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்குப் பின்னால் முடிவு செய்வோம் என  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.  
 
மத்திய பிரதேச மாநிலத்தில்  இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் பாஜக உட்பட அனைத்து எதிர்கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன
 
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமலே பாஜக தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசிய போது ’மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம் என்று தெரிவித்தார் 
 
 வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யாமல் இந்தியா கூட்டணி தேர்தலை சந்திக்கிறது என்று விமர்சனம் செய்த பாஜக தற்போது முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலை சந்திக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran