திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (14:52 IST)

முதல் மாதம் ரூ.29,000 வழங்க வேண்டும்; ரூ.1000 திட்டம் குறித்து அண்ணாமலை..!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது கூறினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா நினைவு நாள் அன்று தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து கூறிய போது திமுக ஆட்சி தொடங்கி 28 மாதங்கள் ஆன நிலையில் 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து மொத்தம் 29 ஆயிரம் முதல் மாதம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran