திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 2 ஆகஸ்ட் 2023 (17:06 IST)

அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் போட்டியா? அண்ணாமலை தகவல்..!

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக நடை பயணம் செய்து வருகிறார் என்பதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த நடைபயணத்திற்கு மிகப்பெரிய ஆதரவு தமிழக மக்கள் மத்தியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நடைபயணத்தின் போது அவ்வப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் என்பதும் பொதுமக்கள் கூடிய கூட்டத்தில் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும்  மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். அதனால் அவர் 2026 ஆம் ஆண்டு நடைபெறும்  சட்டமன்ற தேர்தலில் மட்டுமே போட்டியிடுவார் என்று தெரிய வருகிறது,. ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva