ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (13:25 IST)

மலையோடு மோதி மண்ணாகிவிட வேண்டாம்.. ஈபிஎஸ்-க்கு பாஜக எச்சரிக்கை..!

மலையோடு மோதி மண்ணாகிவிட வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரை பாஜகவினர் எச்சரிக்கை விடுத்து  அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே பாஜக பிரமுகர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் மத்தியில் கடும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி பேட்டி அளித்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டும் வருகின்றனர். 
 
குறிப்பாக  அண்ணாமலை அரசியலில் ஒரு  கத்துக்குட்டி என்று செல்லூர் ராஜூ கூறியதற்கு அண்ணாமலை ’அரசியல் விஞ்ஞானிகள் எல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுத்து மதுரை பாஜகவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் மலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம் என்றும் அதிமுகவின் ஊழல் அமைச்சர்கள் பட்டியலை தேடி எடுத்து அனுப்ப எங்களால் முடியும் என்றும் பாஜக தனித்துப் போட்டியிட்டதால்தான் அதிமுக 10 மேயத் தேர்தலில் தோல்வி அடைந்தது என்றும் தெரிவித்துள்ளனர்
 
 இரட்டை இலை சின்னம் மீதான மரியாதைக்காக அமைதி காக்கிறோம் என்றும் அதிமுக தலைவர்கள் அண்ணாமலையை விமர்சித்தால் ஊழலை வெளிக்கொண்டு வருவோம் என்றும் அந்த அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva