திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2023 (18:54 IST)

மெய்சிலிர்க்கும் இறை அனுபவம்.. ஶ்ரீ ரமண மகரிஷி இல்லத்தில் அண்ணாமலை..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது என் மண் என் மக்கள் என்ற நடைபயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் விருதுநகர் மாவட்டத்திற்கு சென்று உள்ளார். அங்கு ஸ்ரீ ரமண மகரிஷி இல்லத்துக்கு சென்ற அவர் அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
இன்றைய தினம், விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள பகவான் ஶ்ரீ ரமண மகரிஷி பிறந்து வாழ்ந்த அவரது இல்லத்திற்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது.  
 
சிறு வயதிலேயே ஆன்மீகத் தேடலில் மூழ்கி, திருவண்ணாமலையில் ஞானமடைந்த பகவான் ஶ்ரீ ரமண மகரிஷியின், தன்னை அறிதலே ஆன்மீகம், இறைவனை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால் எளிதில் காணலாம் என்ற மகத்தான தத்துவம் பாகுபாடின்றி அனைவருக்கும் பொருந்தும். 
 
மெய்சிலிர்க்கும் இறை அனுபவமும், சலனமற்ற மன அமைதியும் ரமண மகரிஷி இல்லத்தில் இன்று பெற்றதில் பெரும் மகிழ்ச்சி. 
 
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!
 
Edited by Mahendran