வியாழன், 20 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2025 (13:12 IST)

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "கெட் அவுட் மோடி" என்று சொல்லி பார்க்கட்டும் என்று கரூரில் நடந்த போது கூட்டத்தில் அண்ணாமலை ஆவேசமாக பேசியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
கரூரில் பாஜக சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசிய போது, "இந்த கூட்டத்தில் திராவிட தற்குறிகளான உதயநிதி, அன்பில் மகேஷ் போன்றவர்கள் ஸ்டைலில் பேச உள்ளேன்" என்று கூறியவர், "தாய்மார்கள் மட்டும் மன்னிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
 
"சூப்பர் ஸ்டார் ஒரு காலத்தில் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" என்று சொன்னார். அதேபோல், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் கூறினார்.
 
"தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்தால், முதலில் 'கோ பேக் மோடி' என்று   கூறினோம். இனிமேல் 'கெட் அவுட் மோடி' என்று கூறுவோம்" என உதயநிதி பேசியுள்ளார்.
 
"நீ சரியான ஆளாக இருந்தால் 'கெட் அவுட் மோடி' என்று சொல்லு, பார்க்கலாம்.  தாத்தா, அப்பா முதல்வர் முதற்கொண்டு உலகத் தலைவரை மதிக்காத கத்துக்குட்டி உதயநிதி! சூரியன் உதித்த பின்னர் 11 மணிக்கு வெளியே வரும் உனக்கு இவ்வளவு திமிர் இருந்தால், மக்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்?" என்று கூறினார்.
 
Edited by Mahendran