செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (20:30 IST)

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் அரசுக்கு என்ன வேலை? அண்ணாமலை

Annamalai
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் அரசுக்கு என்ன வேலை? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
மே 23ஆம் தேதி, சிதம்பரம் நடராஜரை அவதூறாகப் பேசிய நபரை அறிவாலயம் அரசு கைது செய்யாமலிருப்பதைக் கண்டித்து சிவனடியார்கள் போராடினார்கள். 
 
கயவனை தண்டிக்காமல், போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலை முற்றுகையிட்டுள்ளது இந்து சமய அறநிலையத் துறை.
 
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் அரசுக்கு என்ன வேலை?தொடர்ச்சியாக ஒரு சமயத்தாரை மட்டும் மனவருத்தத்துக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கும் இந்த அறிவாலயம் அரசு செய்யும் காரியங்களைக் கண்டு தமிழக பாஜக  அமைதியாக இருக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.