செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 7 ஜூன் 2022 (13:22 IST)

மத்திய அரசு பணம் கொடுத்தாலும் தூர்வாற விரும்பாத தமிழக அரசு: அண்ணாமலை

Annamalai
குளங்களை தூர்வார மத்திய அரசு பணம் கொடுத்தாலும் தூர்வார திமுக அரசுக்கு தயங்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல அணைகளை காமராஜர் கட்டினார் என்றும் குளங்கள் கிணறுகளை வெட்டினார் என்றும் ஆனால் அதன் பின் வந்த ஆட்சியாளர்கள் புதியதாக குளங்களை ஏற்படுத்தவில்லை என்றாலும் ஏற்கனவே உருவாக்கியஒரு குளத்தை தூர்வாரவில்லை என்றும் கூறினார் 
 
தூர் வாருவதற்கு 100 சதவீத பணத்தை மத்திய அரசு கொடுப்பதற்கு தயாராக இருந்தாலும் தமிழக அரசு தூர்வார தயாராக இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் 
 
அவரது இந்த குற்றச்சாட்டுக்கு திமுக தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்