புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (11:56 IST)

புயலால் தள்ளி வைக்கப்பட்ட அண்ணாமலையின் நடைப்பயணம்.. மீண்டும் தொடங்குவது எப்போது?

புயலால் தள்ளி வைக்கப்பட்ட அண்ணாமலையின் நடைப்பயணம்.. மீண்டும் தொடங்குவது எப்போது?
தமிழகத்தை மிக்ஜாம் புயல் தாக்கியதை அடுத்து அதன் காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக  என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய நடை பயணம் ஒத்திவைக்கப்பட்டது. 
 
நடை பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை வந்த அண்ணாமலை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு சென்று நிவாரண உதவி வழங்கி வருகிறார். 
 
இந்த நிலையில் தனது நடை பயணத்தை மீண்டும் டிசம்பர் 16ஆம் தேதி தொடங்க இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். அன்றைய தினம் செஞ்சியில் இருந்து நடை பயணம் தொடங்கும் என்று பாஜக பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்  
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  என்மண் என் மக்கள் என்ற நடைபயணத்தை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran