திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 4 ஆகஸ்ட் 2021 (11:27 IST)

இரட்டை வேடமா? அண்ணாமலை மறுப்பு!

பாஜகவின் உண்ணாவிரத போராட்டம் என்பது கர்நாடகாவிலுள்ள அனைத்து எதிர்கட்சிகளுக்கும், ஆளுங்கட்சிக்கும் எதிரானது என அண்ணாமலை கருத்து. 

 
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சிக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக பாஜக அரசின் அணைக்கட்டும் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பாஜக அரசிடம் தமிழகம் முறையிட்டு வரும் நிலையில், தமிழக பாஜகவும் ஆதரவாக போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
 
இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “இந்தியாவில் அதிக இரட்டை வேடம் ஏற்றவன் நான், அப்படி இரட்டை வேடம் போடுபவர்களை நான் வெகுவாக அறிவேன். மேகதாது விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம்தான் போடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இது குறித்து பேசிய அண்ணாமலை, மேகதாது விவகாரத்தில் பாஜகவின் உண்ணாவிரத போராட்டம் என்பது கர்நாடகாவிலுள்ள அனைத்து எதிர்கட்சிகளுக்கும், ஆளுங்கட்சிக்கும் எதிரானது . தமிழக விவசாயிகளுக்காக  பொதுமக்களுக்காக தான் உண்ணாவிரதம். தமிழக மக்களையும், தமிழுணர்வையும் பிரதமர் மோடி மதித்து வருகிறார் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.