திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 4 ஆகஸ்ட் 2021 (09:56 IST)

பெகாசஸ் விவகாரத்தில் பாஜக அரசுக்கு அழுத்தம் - எதிர்க்கட்சிகள் முடிவு!

பெகாசஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ராகுல் தலைமையில் 15 எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். 

 
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நேற்றுடன் 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் தொடர்ந்து பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஒவ்வொரு நாளும் அமளி காரணமாக நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. 
 
இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல அமளியால் இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, பாஜக அரசு அவையை நடத்துவதற்கான சமாதான முயற்சிகளை துவங்கியுள்ளது. இதனிடையே, பிரதமர் மோடிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டுமென ராகுல் அழைப்பு விடுத்தார். 
 
ஆம், பெகாசஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ராகுல் தலைமையில் 15 எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து, நல்ல ஒத்துழைப்புடன் ஒன்றிய பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.