திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 மார்ச் 2023 (08:21 IST)

மோடி, அமித்ஷாவுடன் அண்ணாமலை பேசியது என்ன? பரபரப்பு தகவல்கள்..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்ற நிலையில் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியவர்களை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்த சந்திப்பின்போது கர்நாடக சட்டசபை தேர்தல் விஷயங்களுக்காக ஆலோசனை செய்ததாகவும் பாஜக தலைமை கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுக்க வேண்டும் என்று அண்ணாமலையிடம் கேட்டுக் கொண்டதாகவும் புறப்படுகிறது.
 
தமிழகத்தில் அதிமுக கூட்டணி வேண்டாம் என்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை கூறியதை அடுத்து அவர் ராஜினாமா செய்யத் தான் டெல்லி சென்றார் என்று கூறப்பட்டது. 
 
ஆனால் கர்நாடக மாநிலத்தில் வெற்றிக்கனியை எட்டிப்பறிக்க அந்த மாநிலத்தில் உள்ளவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை பணி புரிய வேண்டும் என டெல்லி தலைவர்கள் கூறியதாக டெல்லி வட்டாரகள் கூறுகின்றன.
 
Edited by Siva