ஒரே ஒரு வாக்கு பெற்ற பாஜக வேட்பாளருக்கு அண்ணாமலை வாழ்த்து!

annamalai
ஒரே ஒரு வாக்கு பெற்ற பாஜக வேட்பாளருக்கு அண்ணாமலை வாழ்த்து!
siva| Last Updated: புதன், 13 அக்டோபர் 2021 (08:30 IST)
சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன என்பதும் முன்னிலை நிலவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட்ட கோவையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் ஒரே உருவாக்க மட்டுமே பெற்று இருந்தார். அவர் பாஜகவின் நிர்வாகியாக இருந்த போதிலும் சுயேட்சை சின்னத்தில் தான் போட்டியிட்டார் என்பதும் அவருக்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

தன்னுடைய வீடு நான்காவது வார்டில் இருப்பதாகவும் ஆனால் தான் போட்டியிட்டது 9-ஆவது வார்டு என்றும் அதனால் தான் தன்னாலும், தனது குடும்பத்தினரானாலும் தனக்கு ஓட்டுப் போட முடியவில்லை என்று விளக்கம் அளித்தார்
இந்த நிலையில் ஒரே ஒரு ஓட்டு பெற்ற பாஜக வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை அடுத்த முறை அவர் போட்டியிடும் போது அவருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அடுத்த முறை அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்றும்

வாழ்த்து கூறினார்.
இதில் மேலும் படிக்கவும் :