திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2017 (06:35 IST)

அண்ணா பல்கலை தேர்வு ஒத்தி வைப்பு: மாணவர்கள் கோரிக்கை ஏற்பு

சென்னையில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருவதால் சென்னையின் பெரும்பாலான பகுதி ஸ்தம்பித்துள்ளது. சாலைகளில் அதிகளவு தண்ணீர் இருப்பதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.



 


இந்த நிலையில் நேற்றிரவே சென்னை உள்பட ஆறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அண்ணா பல்கலை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

ஆனால் மாணவர்கள் டுவிட்டரின் மூலம் பல்கலைக்கழக நிர்வாகத்தினர்களுக்கு விடுத்த கோரிக்கையை அடுத்து சென்னை மாவட்ட ஆட்சியரும், வருவாய்துறை அதிகாரிகளும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருடன் ஆலோசணை நடத்தினா். இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் உறுதி செய்துள்ளார்.