திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2017 (12:08 IST)

திகில் படம் பார்த்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கொல்கத்தாவில் திகில் படம் பார்த்த பிளஸ் 1 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்ரீஜன் சவுத்ரி(17) என்பவர் பிளஸ் 1 படித்து வருகிறார். அவர் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து அவர் குடுமபத்தினர் கூறியதாவது:-
 
ஸ்ரீஜன் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து திகில் படம் பார்த்தார். படம் பார்த்ததில் இருந்து அவர் வித்தியாசமாக நடந்து கொண்டார். என்ன ஆனது என்று கேட்டதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. படம் பார்த்த பிறகு அவர் தற்கொலை செய்து கொள்வார் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றனர்.
 
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீஜனுடன் படம் பார்க்க சென்ற அவரின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.