1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (22:17 IST)

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: பெரும் பரபரப்பு

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் காவலர்கள் வானத்தை நோக்கி காவலர்கள் துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் எதிர்க்கட்சி பிரமுகர்களின் வீடுகளில் சோதனை என்ற பெயரில் ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்வதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் இன்று திடீரென காவலர்கள் சோதனை செய்ய முயன்றனர். ஆனால் சோதனை செய்ய வந்த காவலர்களை அமமுக தொண்டர்கள்  தடுக்க முயன்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
 
பின்னர் சோதனை செய்ய வந்த காவலர்களை தடுப்பவர்களை கலைக்கும் நோக்கத்தில் காவல்துறையினர் திடீரென 4 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். காவலர்களின் இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அமமுகவினர்களை தேர்தல் பணி செய்யவிடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது